கடவுளின் குழந்தைகள்

கடவுளின் குழந்தைகள்...


வெவ்வேறு
வண்ணம்
கொண்ட எண்ணற்ற
பூக்கள் இங்கு
அழகாய் சிரிக்கிறது

இங்கே
நித்தமும் போராட்டம்
வயிற்றுக்கே எனும் போது
மற்றதெல்லாம்
நினைத்து பார்க்க
நெஞ்சுக்கே துணிவிருக்கா...

உங்களின்
முகம் காணா
முகவரிகள்
தொலைந்து போயின
இருப்பினும்
அனைவருக்கும்
ஒன்றே
பெயர் எழுதும்
விதியானது
ஆதரவற்றோர் இல்லம்
துணையானது


கல்லாகி போன
சிலையெல்லாம்
கடவுள்
என்றிட

உயிர் சிலையாக
திரியும்
மழலைகளுக்கு
அன்னாபிழேகம்
செய்தால் தவறோ

உனக்கு புண்ணியம்
கிடைக்க
அந்த குழந்தைகளுக்கு
போஜனம் கிடைக்கும் வரமே...

எழுதியவர் : த பசுபதி (12-Sep-18, 5:03 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 63

மேலே