அன்புக்கழனி

அன்றொரு நாள்
பெய்த மழையில்
அன்புக்கழனியில்
ஆசையாய் நட்டோம்
ஒரு விதையை

அழகாய் இட்டோம்
அதற்கொரு பெயரை
நட்பென்று

நட்டவன் செயலோ
விதியிட்டவன் செயலோ
விளைந்தது ஏனோ
காதல் எனும் பயிர்

வருடாத தென்றலும்
வாராத வெய்யிலும்
கூடாத மேகமும்
வாட்டினவே
என் பயிர்கள்
வாடினவே

அறுந்துண்டு வாழ்வோன்
இரந்திங்கு நிற்க
இதோ
மடியும் பொழுதில்
மழையென அவள்

காதல் விதை
காணாமல் போனது
கழனி முழுக்க
நட்பானது..

எழுதியவர் : முருகேசன் sathiyamoorthy (12-Sep-18, 5:14 pm)
பார்வை : 42

மேலே