தனிமை
தொலைந்து போன ஞாபகங்களின்
வளர்பிறையாய் என் தனிமை
அஸ்தமனத்தின் விளிம்பில்
உயிர்பிடித்து ஊசலாடுகிறது
இரவின் மகரந்தசேர்கையில்
தேன்நுகரா வண்டானேன்-நான்
உறைந்த உதிரத்தின்
உயிர் சிதையா புழுவாகிக் கிடக்கிறேன்
செதுக்கிய சிற்பத்தில்
உளி தீண்டிய கீறல்கலாய்
ஒதுக்கப்பட்ட வாழ்வில் யானே
ஓர் தனிமரம்
வடுக்கள் இல்லாத எந்தன்
மனப் பிணிக்கு
பாசை தெரியாதவன் வரைந்த
கோலப் பெயர் “தனிமை”
உலகிற்கு நானோ
இருட்டு வாழ்க்கை மூடன்- எனக்கு யாவரும்
நிசப்த இருட்டின் வெண்மையரியா
மானிடக் குருடர்கள் என்பேன்...
ரா.அன்பரசு,
ஆங்கில ஆசிரியர்,
கோவை