ஆளும்வர்க்கம் ஆட்சியில்

அகமெங்கும் அழுக்காகி
வெளியேறா புரையோடி
எண்ணங்களில் துர்நாற்றம்
உடலுக்கு புதுஉடையாம்,
வெளியெங்கும் புதுப்பொலிவாம்.

வார்த்தையெல்லாம் கலப்படம்
வேற்று மொழிகளால் அல்ல ,
வெறும் பொய்களால் .

மழை ஈரம் பட்டதில்லை
கால் மண்ணை தொட்டதில்லை
கதிர்வேப்பம் சுட்டதில்லை
வியர்வை துளி,
தோல் நுனியை தொட்டதில்லை .

விவசாயி அழுக்கேன்கிறீர்
கறைபடிந்த கைகளைக்கொண்டு.,
எட்டுவழி சாலை என்றீர்
வழியின்றி விவசாயம்
விழி பிதுங்கி விவசாயி .

சென்னையோ மூச்சுமுட்டி
நெரிசலிலே சாலை பிதுங்கி
சாக்கடைகள் சங்கமித்து
வெளியேற வழியில்லை
மழை நீரோ , மனித உயிரோ ..

எட்டுவழியில் எங்கு செல்ல ?

எழுதியவர் : (17-Sep-18, 1:02 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 22

மேலே