நீங்கள் தயாரா
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம்.
கண்ணீரைக் கண்டு கருணை பிறக்கலாம்.
ஆனந்த முகங்களைப் பார்த்து , மன
ஆவிக்குள் அமைதி உதிக்கலாம்.
காலத்தின் ஏடுகளை புரட்டலாம்,
கற்பனை சிறகுகளை விரிக்கலாம்.
கவியுலகில் சஞ்சரித்து.புதிய
கவிதையினால் காவியம் படைக்கலாம்.
அண்டை அயலுடன் கை குலுக்கலாம்
நம் சண்டை சச்சரவு மறந்து போகலாம்.
.ஆறறிவு மாந்தர் மத்தியில் ,அன்பு
நெரிமுறையின் ஆதவன் உதிக்கலாம்.
நானிலத்தில் போர்கள் ஓயலாம்
நாடுகள் ஒற்றுமையை தழுவலாம்.
பாரெங்கும் சமாதான பூப்பூத்து, எங்கும்
பாசத்தின் எல்லை காணலாம்.
கூடி ஒன்றாய் உழைக்கலாம்,
கூப்பிட்டுப் பகிர்ந்து கொடுக்கலாம்.
ஏழைகளின் சிரிப்பில் மெய்மறந்து
இன்ப ஏசியாவில் சேர்ந்து வசிக்கலாம்.
தயாரா? Are You Ready?