பால்ய வீதியில்

பால்ய வீதியில் :
ஆபிரகாம் வேளாங்கண்ணி:
தினமணி கவிதைமணி
○○○
பால்ய வீதியில் : ஆபிரகாம் வேளாங்கண்ணி: தினமணி கவிதைமணி
○○○
உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல

உங்களால் வந்தவர்கள் அல்ல
உங்கள் வழியில் வந்தவர்கள்

உங்கள் அன்பை அவர்களுக்கு
ஊட்டுங்கள் எண்ணங்களை அல்ல

உங்கள் அறவணைப்பை காட்டுங்கள்
உங்கள் அதிகாரத்தை அல்ல

அவர்கள் எண்ணங்கள் முற்றிலும்
வேறு; உங்களால் அவற்றை;

தொடக்கூட முடியவே முடியாது
இவை படித்ததில் பிடித்தது

ஐந்து வயதிற்கு அப்புறம் அறிவுக்
கண்கள் திறந்து நல்லதோ தீயதோ
ஆழ் மனதினிலே பதிந்து விடும்

நூறு வயதை தாண்டிய போதும் மாயாது துளிரும் பால்ய வீதியில்

தனிமையை சந்திக்கும் சமயங்களில்
சூழ்நிலைகள் குணங்களை மாற்றும்

நடந்து வரும் பாதைகளே நேற்று
இருந்ததை இனி இருக்க ப்போவதை
வகுத்து நல்லவரோ தீயவரோ ஆவர்

சமூகத்தின் கண்ணுக்கு தென்படும்
ஒதுக்கி வைக்க முற்படும் அல்லது
தலைவனாக்கி புகழாரம் சூடிடும்
••••••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்
மும்பை மகாராஷ்டிரா

நன்றி
" பால்ய வீதியில் "
கவிதைமணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (8-Oct-18, 3:18 pm)
Tanglish : paalya veethiyil
பார்வை : 68

மேலே