காதல் பானம்

பாடாய்ப் படுத்தாதே உன்
கொவ்வை இதள்களால்
பாணம் தொடுக்காதே உன்
கொஞ்சும் விழிகளால்
தீராத தாகத்தால் தவிக்கிறேன்
அன்பே உன்னாலே
அருந்தத் தருவாயா அருகே
அமர்ந்து காதல் பானம்
பொருந்தி வருவாயா சேர்ந்து
செல்ல வாழ்க்கைப் பயணம்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (16-Oct-18, 2:20 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kaadhal paanam
பார்வை : 107

மேலே