என்னவன்

என்னவன் போர் வீரன்
வீரனுக்கேற்ற விரி மார்பன்,
திடகாத்திரன் , அழகன்,
அவன் என்னை தொடும்போதும்
தொட்டு அணைக்கும்போதும்
இன்பம் தந்திடுவான்-என்னை
வியக்கவைப்பான்-இந்த
இரும்பு கைகளுக்குள் இந்த
மென்மை எப்படி புகுந்ததோ என்று
நினைக்க வைப்பான் , ,
இப்படி நான் நினைத்து கண்
இமைகளை மூடி திறக்கும்முன்
அவன் என் கன்னத்தில் தந்திடுவான்
அன்பு முத்துக்கள் , மலர் முத்தங்கள் , அவன் என்மீது
வைத்துள்ள உண்மைக்காதலின்
முத்திரைகள்,இன்பதுகள்கள் ,
என்னை மேம்படும் வியப்பின்
எல்லைக்கே கொண்டு செல்ல;
எப்படி இந்த வஜ்ஜிர தேகத்திற்குள் இப்படியோர்
மலரொத்த மென்மை ..............

என்னவன் இரும்பு மனிதன் வீரன்,
அவன் இதயமோ ஒரு
மல்லிகைப்பூந் தோட்டம்
இப்படி அவன் ஒரு தனிப்பிறவி
அவனோடு பேசிப் பார்த்தேன்
பேச்சிலும் அவன் ஓர் மயக்கும் கவிஞன்
அளவோடு உறவாடி காதலுக்கு
இலக்கணமுண்டு என்று காட்டும் அவன்
தனிப்பிறவி, என்னவன்,என் இதயம் அவன்.




.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Oct-18, 12:50 pm)
Tanglish : ennavan
பார்வை : 192

மேலே