மீனவன்

மீனவன்
மரம் என்று சொல்லாமல்
அதனை வரம் என்று சொன்னீர்கள்
கட்டுமரமே உங்கள் வாழ்க்கைதெய்வம்
கடல் தாயே உங்கள் வழிகாட்டி
கலங்கிய நீரில் வாழ்க்கைக்காக களம் இறங்கிய மானிடா

நலமில்லா வீட்டில் சுகமில்லா உறக்கம்
விடியலை நோக்கி எங்கள் வாழ்வும் இன்று விடியுமா என்ற ஏக்கம்
ஒழுங்கில்லா பாதைகள்
ஒளி மங்கிய விளக்குகள்
இருப்பினும் ஒரு விடியல் வரும் என்ற என்னம்

காற்றிலே பறக்கும் காகிதம்தான் இவர்களின் வாழ்க்கை
இதை ஏட்டிலும் எழுதமுடியாது ஏன் என்றால் கடல் நீர்பட்டால் அழிந்துவிடும் அல்லவா
முதுகில் ஒரு சுமை முந்தும் உன் இமை கடல் பாதையை வாழ்க்கை என நோக்கி

சலித்து தேடாமல் உழைத்து தேடினாய்
திரும்பிய திசை எல்லாம் மீன்கள்
ஆனந்தத்தில் கண்ணீருக்கும் கடல்நீர்க்கும் பிரிவினை இல்லை

செருப்பில்லா கால்கள்
தெரிந்திருந்தும் உன்னை வரவேற்கும் கடல்கள்
திரும்புவது நிச்சியமல்ல என தெரிந்திருந்தும்
திமிருடன் உழைக்கிற வர்க்கமடா மீனவன்

BY DEAR GUYS
ABDUL BACKI.K

எழுதியவர் : அப்துல் பாக்கி (25-Oct-18, 9:43 pm)
சேர்த்தது : ABDUL BACKI
Tanglish : meenavan
பார்வை : 59

மேலே