நட்பு
உயிர்தோழியர் அவ்விருவர்
அழகிலும் பண்பிலும்
இருவருமே சிறந்து பரிமளிக்க
இடையில் இவ்விருவற்கிடையில்
ஒருவன் பார்வை ஒருதியைத் தாக்க
அவன் அவளுக்குள் காதல் அரும்ப
ஓர் பிரச்னையும் முளைத்தது
அந்த 'அவன்' அந்த அவள் மனதையும்
அவனறியாமல் தாக்கிட
எப்படியோ இதை இங்கிதமாய்
தெரிந்துகொண்ட அவள் தோழி
தன காதலை அவளுக்காக துறந்தாள்
அவள் வேண்டாமலேயே -இதை
தியாகம் என்பதா இல்லை
இவ்விரு தோழிகளின் நட்பின் மாட்சி என்பதா
உயர் நட்பிற்க்கேது அடைக்குந்தாழ்