மழைக்காதல்
நள்ளிரவு
குளிர்
மழைநிறை
வானிருளில்
ஜன்னலருகே
நான்…
உன் உறங்குதல்
கலையக் கூடாதென
சப்தமின்றி
சுவாசிக்கின்றேன்…
உனக்கான
நாளையப் பூ
வெளியே
மழையில்
நனைகிறது…
உள்ளே நானும்…
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
