இருங்கோவேள்

தமிழ்நாட்டில் வாழ்ந்த பலவகை மரபில் வேள் என்பதும் ஒன்றாகும்.அந்த மரபில் வந்தவன் இருங்கோவேள் எனும் அரசன் நாற்பத்தி ஒன்பதாம் தலைமுறையை சேர்ந்தவன்
இருங்கோவேள் சிறந்த கொடையாளி.
இருங்கோவேள் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வன விலங்குக ளை அஞ்சாது பாய்ந்து தாக்கும் வலிமை வாய்ந்த நாய்கள் அவனுடன் சென்றன. வீரர் சிலரும் அவனுடன் துணையாக இருந்தனர். கானகத்து கொடு விலங்குகளை குறிவைத்து இருங்கோவேள் எய்தான். யானைகள் பல வீழ்ந்தன.கரடிகள் பல குற்றுயிராய்க் கிடந்தன.சிறுத்தைகள் சின்னாபின்னமாயின. காட்டுப்பன்றிகள் கதறி மடிந்தன. பயிருக்கு தீங்கு செய்யும் பல விலங்குகளையும் அவன் அம்புகள் அழித்தன.
நெடுநேரம் போர்செய்த இருங்கோவேள்க்கு சோர்வு உண்டாயிற்று. அவனது கால்களும் கைகளும் களைத்தன.ஓய்வு எடுக்க அவன் உள்ளம் விரும்பியது. காட்டில் சிறிது தூரத்தில் ஒரு கட்டிடம் அவன் கண்ணில்பட்டது. அதை நெருங்க நெருங்க அது ஓர் ஆலயம் என்பதனை இருங்கோவேள் அறிந்தான். கடவுளையும் கண்டு வணங்கலாம் என அவன் உள்ளம் மகிழ்ந்தது. ஆலயத்தை அடைந்ததும் அங்கு ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதனைக் கொண்டான்.ஆனால் மறுகணத்தே முனிவருக்கு எதிராக இருந்த புதரில் புலியொன்று அவர் மீது பாய்வதற்கு நிற்கும் காட்சி கண்ணில் பட்டது.அவன் கையொன்று தோளிலிட்ட வில்லைப் பற்றியது.மறு கை அம்பறாத் தூணியில் தொங்கும் அம்பில் பாய்ந்தது. அடுத்த கணத்தே வேகமான அம்பொன்று அவன் வில்லினின்றும் விரைந்தது. பாயநின்ற புலி பதை பதைத்துத் தரையிலே உருண்டது.
இறக்கும் புலி செய்த ஓசை இடியோசையெனக் கானகமெங்கும் எதிரொலித்தது. கடுந்தவத்திலிருந்த முனிவரும் கண் விழித்தார். மண்ணில் புலியொன்று மாண்டு கிடப்பதையும், மன்னவன் ஒருவன் தன் முன் நிற்பதையும், அவர் கண்கள் கண்டன. முக்காலமும் உணர வல்ல முனிவர் நிகழ்ந்த செயலை ஒரு நொடியில் அறிந்து மன்னவனை வாழ்த்தினர். மாசிலா முனிவரின் ஆசிபெற்ற இருங்கோவேள் மனமகிழ்ந்து அரண்மனை அடைந்தான்.
பாரிவள்ளல் இருங்கோவேள் மரபினைச் சார்ந்தவன்.

எழுதியவர் : உமாபாரதி (2-Nov-18, 10:07 pm)
சேர்த்தது : உமா பாரதி
பார்வை : 33
மேலே