உன்னால் முடியும்

மனிதனே !
மடைத் திறந்து ஓடுவாய் ...
தடைகளை !
படிக் கல்லாய் மாற்றுவாய் ...
உலகிலே !
உயர உயர பறந்திடுவாய் ...
மண்ணிலே !
மலை போல் வளர்ந்திடுவாய் ...
கடலின் ஆழம் உணர்ந்தே ...
மீனும் நீச்சலிடும் !
நிலத்தின் தரத்தை உணர்ந்தே ...
நெல்லும் காட்சி தரும் !
அதுபோலவே ...
உன் வாழ்க்கை உணர்ந்திடு ..
திறமை வளர்த்திடு ...
தோல்வியை வென்றே ...
வெற்றி கண்டிடு ...
உன்னால் முடியும் ...
யாவுமே !
கண்கள் கனவுகள் ...
காணுமே !
அதை மெய்யாக்கினால் ...
உலகம் உன் பெயர் ...
சொல்லுமே !

எழுதியவர் : M. Santhakumar . (4-Nov-18, 11:36 am)
சேர்த்தது : Santhakumar
Tanglish : unnaal mudiyum
பார்வை : 1761

மேலே