En Maganukaga
ஓராண்டு கொண்டாட்டம்
என் உயிரில் பூத்த உயிரின்
முதல் அழுகை, முதல் மடிதுயில்,
முதல் சிறுநகை, முதல் தழுவல்,
முதல் எச்சில் முத்தம், முதல் தவழ்நடை
குறும்பனின் அழுகையின் இடையே முதல் "அம்மா", எழுச்சியாய் எழுந்து வந்த முதல் நடை
இப்படி மெய்சிலிர்த்து நின்ற கணங்கள் அதிகம்,
என் கண்ணனின் சிறுநகையில் பூக்கள் மலர்வதும் தோற்க கண்டேன்,
என் நிலா முகனின் பார்வையில் என் தாயின் கனிவும் தோற்க கண்டேன்,
என் செல்லப்பிள்ளையின் எச்சில் முத்தத்தில் இதை விட சொர்கமே வேறில்லை கண்டேன்,
என் மழலை என்னை அம்மா என்றழைத்த நொடியில் என் தாயினில் ஜனித்ததற்கான அர்த்தம் கண்டேன்,
நான் வாழும் வாழ்விற்கு ஓர் அர்த்தம் தந்த என் செல்லக்குட்டி vrishank கு அனைவரின் பூரண ஆசிகளுட ன் , வாழ்வின் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்றிருக்க
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
To my lovable, little rose bundle 😘😘😘😘😘