தெய்வத்தாய்

உலகில் நான் தோன்ற என்னை கருவில் சுமந்தாய்
உன் இதய துடிப்பாள் எனக்கொரு இதயம் கொடுத்தாய்
நான் உறங்க நீ உறங்காமல் உன் நெஞ்சில் இடம் கொடுத்தாய்
நான் தவறுகள் செய்தால் அதை திருத்த செய்தாய்
என் சோதனைகளை, சாதனைகளாய் மாற்றி தந்தாய்
நான் அழுகையில் நீ துடிதுடித்தாய்
நான் ருசிக்க நீ பசி மறந்தாய்
என் நிழல் என்னை பிரிந்தாலும் என்னை பிரியாதத் தாய்
நீ ஒரு தெய்வத்தாய்

எழுதியவர் : பி.திருமால் (6-Nov-18, 12:34 pm)
சேர்த்தது : பி திருமால்
பார்வை : 140
மேலே