அம்மா
அம்மா...
வார்த்தைகள் இல்லாமல் பேசிக்கொண்டு
கண்கள் துறக்காமல் ரசித்துக்கொண்டு
காற்றே இல்லாமல் சுவாசித்துக்கொண்டு
கவலைகள் இல்லாமல் உன் கருவறையில் வாழும் எனக்கு
உன்னைப் பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றியது.....
உன் வயிட்றில் வீணாய் சுற்றுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அமர்ந்து கவியரசியின் வரவுக்காக காத்துக்கொண்டு இருந்தேன்.....
அடிமுடி தேடினாலும்..
அகராதியை புரட்டினாலும்..
முழுமையான அர்த்தம் அறிய முடியாத..
உயிர் சித்திரமான என் தாயே..
உன்னை பற்றி எனக்கு கவிதை வந்ததை விட
கவலை தான் அதிகம் வந்தது..
இன்னும் 1 மாத காலத்தில் நான் உன்முகம்
பார்பேன் என்ற சந்தோசம் ஒரு பக்கம் இருந்தாலும்.
உன்னுள் இருந்து பூமிக்கு தனியாய் வந்துவிடுவேன்
என்ற கவலை...
தாயே நான் கேட்டு ரசித்த முதல் இசை உன்
இதயத்தின் ஓசை...
இன்னும் 1 மாத காலத்திற்கு பின்னால் அதை
என்னால் கேட்க முடியாதல்லவா தாயே....
அதனால் ஒரு சிறு கவலை....
உயிர் எழுத்தில் அ எடுத்து
மெய் எழுத்தில் ம் எடுத்து
உயிர் மெய் எழுத்தில் மா எடுத்து
அழகிய தமிழில் ஒன்றாய் கோர்த்த அம்மா