ஒத்த கவிதை
ஒரு புறம் தேவதை
இன்னொரு புறம் பப்புக்குட்டி
மனசு முழுக்க தமிழ்
இடையில் ஓட்டு வேற போட்டேன்.......
கொஞ்ச நாளைக்கு முன்
ஆதார் அட்டை எடுத்தேன்....
அந்த கொஞ்ச நாளைக்கு பின்
பான்கார்டும் ஆதார்அட்டையும்
சேர்க்கச் சொன்னாங்க-
சேர்த்தேன்.....
ஜீரோ பர்சென்ட்ல
ஐ போன் வாங்குனேன்.....
டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல-
பொன்னாங்கண்ணி கீரை வாங்குனேன்.....
நைட்டு பதினோரு மணிக்கு-
திருட்டு விசிடில
அந்த புதுப்படம் பார்த்தேன்.....
எப்பவாச்சும்
அந்த மனசுக்கு பிடிச்ச அக்கா வந்து-
சூப்பரா எழுதுற தம்பினு
சாட் பன்னுவாங்க
அவுங்களுக்கும் பதில் சொல்றேன்......
தினம் மூனு தமிழ் பேப்பர் படிக்கிறேன்...
திரிவேணி ஹோட்டல்ல-
அடிக்கடி
ரெண்டு புரோட்டா
ஒரு ஒன்சைடு ஆம்லெட் சாப்ட்றேன்....
மகாலிங்கபுரம்
சாய்பாபா கோவிலுக்கு-
மறக்காம வியாழக்கிழமை
அவகூட போய்ட்டு வர்றேன்........
மொட்டைமாடி காக்காவுக்கு-
ஹாய் சொல்லிடுறேன்...
சரியா கிளம்பி-
எங்க வீட்டு ஜிம்மிகிட்ட
ஒரு ஸ்மைல் செஞ்சுட்டுதான் வர்றேன்....
ஆமாங்க
இத்தனையையும் வச்சுகிட்டு
என் ஒத்த கவிதை என்ன செய்யும் ......
பாவம்தான்....
-- பொள்ளாச்சி முருகானந்தம்