நண்பன் முரளி பிறந்தநாள் கவிதை

நாளை பிறந்தநாள் காணும் அன்பு மாப்பி
காசவளநாட்டு செல்லபிள்ளை முரளி வீரமுண்டாா்
.
தோள் கொடுக்கும் தோழனாக
நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ...

வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும்
உன் வாஞ்சையான பேச்சுக்கள்..
.
மொபைல் கடையில் நாம் அடிக்கும் கூத்திற்கு
சரிசமமான சந்தோசம் வேறெங்கும் கிட்டாது..

பெருசு முதல் சிருசுவரை பாரபட்சமே
பாராது நக்கல்விடும் நக்கல் நாயகன் நீ...

கோபம் வருத்தம் என எது இருந்தாலும்
அந்நேரமும் நீ காமடி செய்து கலகலப்பாய் இருப்பாய்...
.
கோபத்தை தவிர வேறேதும் அறியா நான்
உன்னை கண்டு பலமுறை பொறாமை கொண்டிருக்கிறேன் ..
.
எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும்
இயல்பு உனக்கு மட்டுமே சாத்தியம்.
.
நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட
ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ .
.
நட்பின் வாழ்த்துக்கள் இந்த
நண்பனின் வாழ்த்துக்கள் ..........
.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (12-Nov-18, 7:35 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
பார்வை : 389

மேலே