ஒரு ஜனநாயக தீவு சர்வகாதிகார நாடாக மாறலாம்

ஒரு ஜனநாயக தீவு சர்வகாதிகார நாடாக மாறலாம்

இலங்கைத் தீவு குபேரன் ஆண்ட தீவு, அதன பின் இராவணன் ஆட்சி செய்த தீவு என்கிறது இதிகாசம் . சொர்கத் தீவு எனப் பலரால் வர்ணிக்கப் பட்ட. பல கனிவாளமும் இயற்கை வளமும் கொண்ட இலங்கை தீவில் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன் தீவின் வடக்கு கிழக்கில் யாழ்ப்பாண இராச்சியமும் . மத்தியில் கண்டி இராச்சியமும். மேற்கு தேற்கில் கோட்டையும் ருகுன, சீதவக்க ஆகிய இராச்சியங்கள் இருந்தன அவ் இராச்சியங்களில் 181 மன்னர் ஆடசி இருந்தது என்பது வரலாறு. அதன பின் போர்த்துக்கேயர் , ஓல்லாந்தர், பிரித்தானியர் சுமார் 45௦ வருட ங்கள் தமது சட்டத்தையும். அதிகாரத்தையும் பலத்தையும் பாவித்து தீவின் கனிவளத்தை சுரண்டி வாழ்ந்தனர், கல்லூரிகள் தோற்று வித்து உயர் வர்க்கத்துக்கு முதலியார், சேர் பட்டங்களையும் சலுகைகளையும் கொடுத்து மத மாற்றத்தை தோற்றுவித்தனர் . வேற்றின மக்களை பிற நாடுகளில் இருந்து தமக்கு வேலை செய்ய கூலிகளாக தீவுக்கு கொண்டு வந்தனர் சுமார் 450 வருடங்கள் தீவை ஆண்டனர்.
அதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இருந்து சேர, சோழ .பாண்டிய மன்னர்கள் அடிக்கடி தீவின் ,மீது படையெடுத்து, தீவை கைப்பற்றி ஆட்சி செய்தனர் . அது சிங்கள தமிழ்பேசும் இனங்களுக்கு இடையே இனத் துவேசத்துக்கு வித்திட்டது . அந்த துவேசம் மேற்றகத்துவர்களின் ஆட்சி காலத்தில் பெருமளவுக்கு முடங்கிக் கிடந்தது.

இலங்கை ஜனநாயக நாட்டில் பல இன மக்கள் வாழ்கிறார்கள். 1948 இல் பிரித்தானியர் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்ததினால் தமது நேரத்தையும் மனித வளத்தையும் சிறிய தீவில் செலவு செய்யாமல் தங்கத் தட்டில் இலங்கை தீவுக்கு சுதந்திரம் கொடுத்துச் சென்றனர். அவர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்ற முன் இருந்த இராச்சியங்களின் அடிப்படையில் இந்தியாவைப் போல் சமஷ்டி ஆட்சி கொடுத்து சென்றிருக்க வேண்டும். அவர்கள் நினைத்தாரகள எல்லா இனங்களும் சமாதானமாக வாழ்வார்கள் என்று. நனைத்தது ஓன்று, நடந்தது வேறு ஓன்று. அவர்கள் ஆட்சியில் இருக்க முன் இருந்த மாதிரி ஆட்சிக்கும், சமஷ்டி ஆட்சியை இந்தியாவைப் போல் கொடுத்து சென்று இருந்தால் பிரச்சனைகள தோன்றி இருக்காது . அது செய்யாததால் தமிழ் பேசுவோருக்கும் சிங்களம் பேசுவோருக்கும் இன, மத, மொழி அடிப்படையில் வேற்றுமை துளிர் விட்டு வளரத் தொடங்கியது.

பல இனக்கலவரங்களும் .படு கொலைகளும் அதனால் தமிழரின் உரிமைக்காக ஈழத்து போரும் மனித உரிமை மீறல்களும் தோன்றின . தீவின் பொருளாதார வளர்ச்சி பின் நோக்கி சென்றது. ஒரு காலத்தில் இந்திய ரூபாவிலும் கூடிய மதிப்புள்ள இலங்கையின் ரூபாய் படிப்படியாக குறைந்து பலவீனமாகி, இப்பொது ஒரு இந்திய ரூபா 1,5 இலங்கை ரூபாய்களுக்கு சமன். அரசியல் படிப்படியாக குடும்ப அரசியல் ஆட்சியக மாறி உயர் வர்க்கத்தினரே ஆட்சியில் பிரதமராகவும் ஜனதிபதியாகாபும் இருந்தனர். இவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு தீவினை வெகுவாக பாதித்துள்ளது. சீனா குறைந்த வட்டியில அபிவிருத்து நீண்ட கால கடன் கொடுத்து தீவின் பல திட்டங்களை கைப்பற்றியது அதை கண்ட இந்தியா பலாலி ,ஹம்பன்தோட்டே விமான நிலையம், ரயில். வீடடு திட்டங்கலளி ல் ஈடுபட்டது . இலங்கையின் அரசியல் சிக்கலும் பொருளாதார பலவீனமும் னக் கலவரங்களும், மனித் உருமை மீர்லக்ளும் சீன இந்தியாவின்ஆதிக்க போர்களமாக மாறி வருகிறது . தான கடன் கொடுத்த திட்டங்களில் சஐஅல் பட தமது சீன ஊழியர்களை தீவுக்கு ஏற்றுமதிசெயததது வெகு விரைவில் அரசியல் வாதிகளுக்கு கொமிசன் கொடுத்து முழு தேசத்தையும் தமது அதிகாரத்துக்குள் கொண்டு வரத் திட்டம் போட்டு இருக்கிறது இதற்கு இந்தியாவில் மதுரையில் உள்ள ஒரு அரசியல்வாதி இலங்கை அரசியல் வாதிகள் சிலரோடு கூட்டு சேர்ந்து செயல் படுவதுக்கு ஆதாரம் காணக் கூடியதாக இருகிறது.

இலங்கை கிராம மக்களின் மனதில் இனத் துவேசத்தை வளர்த்து ஆட்சியை கைப்பற்ற திட்டம் வகுத்துள்ளது ஒரு கட்சி குடும்ப ஆட்சிக்கு பெயர் பெற்றது அக்கட்சி சர்வதேச சமூகத்துக்கு பொய் சொல்லி ஏமாற்றி இந்தியா உற்பட பதினாலு நாடுகளின் உதவி பெற்று விடுதலி புலிகளை போரில் வென்றதை துட்ட கைமுனு தமிழ் மன்னன் எல்லானை போரில் தொற்கடித்ததை உவமையாக காட்டி சிங்களவர் பெருமையோடு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்ள் . அவர்களுக்கு தெரியாது ஒரு இளம் அரசிளம் குமரனும் ஒரு முதிய மன்னருக்கும் இடையே நடந்த நேரடிப் போர். வேறு நாடுகள் ஈடுபடவில்லை என்பது வரலாறு . துட்ட மைமுனு சிங்கள இளவரசன் போரில் வென்ற பின் தமிழ் மன்னனின் வீரத்துக்கும் நீதி தவறாத நல் ஆட்சிக்கும் மரியாதை செலுத்துமுகமாக டகோபா ஒன்றை நிறுவி அதை கடந்து செல்பவர்கள் மரியாதை செலுத்தி செல்லும் படி கட்டளை இட்டான்.

அறியாமை உள்ள சிங்கள கிராம மக்கள் இனவாத பிரச்சாரத்தை நம்பி விடுகிறார்கள் ஒரு ஜனநாயக நாட்டில் யாப்பும் பார்லிமேந்தும் மிக முக்கிய உயர் இடம் வகிக்கிறது . அதோடு சட்டமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது அந்த தீவின் யாப்பினையும் , பாரளுமன்ற மீறி தற்போதைய ஜனாதிபதியும் முன்னைய ஜனாதிபதியும் கூட்டு சேர்ந்து பாரளுமன்றத்தை கலைத்து மேலும் தொடராமல் நிறுத்தி உள்ளார்கள். அச் செயல் மூலம் அவர்கள் அதன் மூலம் தமது தோல்வியை ஏற்றுக் கொண்டார்கள் இந்த கலைப்பு அரசியல் யாப்புக்கு முற்றிலும் எதிரானது .

இந்தியாவின் “ரோ என்ற புலன் குழு இலங்கை அரசியல்வாதிகள் சிலருடன் சேர்ந்து தன்னை கொலை செய்ய திடமிட்டார்கள் என்பது ஜனாதிபதின் குற்றச் சாட்டு . இனி சட்டம் என்ன சொல்கிறது என்று பொருத்து இருந்து பார்க்கவேண்டும் , ஐ நா சபை உற் பட பல சர்வதேச நாடுகள் தமது எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளன. வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது குறைந்துள்ளது பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது . நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகருகிறது. ஒரு காலத்தில் இருந்த மன்னர் ஆட்சி முடிந்து இலங்கையில் திரும்பவும் அது துளிர் விட ஆரம்பித்து விட்டது. இதில் இந்தியா முக்கிய கவனம் எடுக்க வேண்டும் காரணம் சிங்கள இனம் இந்தியாவில் இருந்து வனத் இளவரசன் விஜயன் மூலம் தோன்றியது என்கிறது நூலான மகாவம்சம்.

ஈழத் தமிழ். முஸ்லீம் இனங்களுக்கு தமிழ் நாட்டுடன் தொப்புல் கொடி உறவுண்டு. ஆகவே இந்தியாவின் தார்மீக கொள்கை, இலங்கை ஒரு சீனாவின் ஆதரவோடு சர்வாதிகார நாடாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம் . தொடர்ந்து அவதானித்துக் கொண்டு இருந்தால் அதன் விளைவு நடந்து முடிந்த பின் நடவடிக்கை எடுப்பது கடினம் இலங்கைத் தீவு இந்தியாவின் தென் முனையில் இருந்து சுமார் முப்பது மைல் தூரத்தில் உள்ளது. இலங்கை தீவு சரவாதிகாரமாக மாறினால் தமிழ்; நாடும் கேரளாவும் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை இந்தியா உணர்ந்து உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடுவது உகந்தது. இல்லையேல் இலங்கை தீவு சீனத் தீவாக மாற வாய்ப்புண்டு . இது இந்தியாவின் பாதுகாப்பிணை பாதிக்கும் என்பது உண்மை.

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை ஸ்ரீலங்காவில் மிக அவசியம் தமிழ் பேசும் சமூகம் ஒன்றிணைந்தால் பாராளுமன்றத்தில் அது பலமுள்ள சக்தியாக இருக்கும். தமிழ் பேசும் மக்களும் முஸ்லிம்களும் இலங்கையில் தமிழ் பேசுபவர்ககள். சிங்கள் கட்சிகள் பிரிந்து விட்டான, ஆ கவே 70 விகித சிங்கள் வாக் குகள் 5 முக்கிய கட்சிகளுக்கு இடையே பிரிந்து விடும் இதனால் தனி சிங்கள் கட்சி தமிழ் பேசும் கட்சின் தயவின்றி அரசு அமைக்க முடியாது. பணத்துக்கும்,பதவிக்கும் சலுகைகளுக்கும் தமிழ் பேசும் கட்சிகள் விலை போககக் கூடாது . அப்படி நடந்தால் தமிழ் பேசும் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டா ர்கள் ; . இந்த சூழ்நிலையை தமக்குச் சாதகமாக பாவித்து தமிழ் பேசும் கட்சிகள் உரிமைகளை பெறமுடியும் எனவே, தமிழ் பேசும் சமுதாயங்களின் ஆதரவு இல்லாமல் ஒரு தனி சிங்கள மொழி பேசும் சமூகம் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியாது. மொழி அடைப்படையில் சாட்சிகள் ஓன்று சேர வேண்டும் இன அடிப்படையில் அல்ல. தமிழ் மொழி பேசும் சமூகம், கொழும்பு செட்டிஸ், பறங்கியர் , காப்பிரிகள் , தமிழர்களாக இருந்து சிங்கள கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் . ஒரு மொழி அடிப்படையிலான ஒற்றுமைக்கு வந்தால், உலகில் 90 மில்லியன் தமிழர்கள் பேசும் மக்களிடமிருந்து ஆதரவு கிட்டும். இலங்கையின் மூத்த மொழி தமில் மொழி. அதன் பின்னரே சிங்களமும் ஆங்கிலமும் வந்தது . பல தமிழ் வார்த்தைகள் பெயர்கள் சிங்களத்தில் அடங்கும்.

ஒரு பிரபல ஜோதிடர் சொன்னான் இலங்கைத் தீவு இன்னும் சில ஆணடுகளில் குமரி கண்டத் தைப் போல் கடலுக்குள் போய் விடும் என்று. நாட்டில் தர்மம் மீறினால் இறைவன் கண்டிப்பான்.
****
பொன் குலேந்திரனின் சொந்த அரசியல் கருத்து

எழுதியவர் : Pon Kulendiren (12-Nov-18, 5:38 pm)
பார்வை : 49

மேலே