பிழைப்பு

~~~~~~~*பிழைப்பு*~~~~
🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀🚣🏻♀
பணம் நோக்கிய பயணத்தை
மனிதன்
பிணம் ஆனதும் முடித்துக்கொள்வான்
சனம் என்ற உயர்திணையில்
மனம் என்றும் நிறைவதில்லை
பிணம் என்ற அஃறிணையில்
பெற்ற எதுவும் தேவையில்லை
உழைப்பென்ற பெயராலே
ஓய்வறியா இப்புவி மனிதா
உன் இலக்கென்ன வாழ்நாளில்
உடல் அழிக்கும் உயிர்த் துறப்பா
ஓசையற்றுப் போகும் வரை
ஆசை உன்னை விடுவதில்லை
மோசமான மனித வாழ்க்கை
காசுதானே உன் சேர்க்கை
பணம் தான்டிய பாசத்தையும்
காசு தான்டிய நேசத்தையும்
காலன் வந்து அழைக்கும்போது
காட்ட அங்கு நேரமில்லை
மனிதா
வாழும் போதே வாழ்ந்து விடு
வாழ்க்கை அரிய பொக்கிஷம்...
க.செல்வராசு..
🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂🚣🏼♂