மறைந்து போனதடா பசுமைக்கிராமம்

பறக்கும் விமானம் ஏறி /
பகட்டு வாழ்வைத்தேடி
சென்ற பின்னும் /
கிராமத்து மண்ணின் மகிமை/
பசு மாட்டின் பால் சுவை /
உறக்கத்தைக் களைக்கும்
குயில் ஓசை /
தூங்க விடாமல் ஒலிக்கும் மணி ஓசை /
விட்டு விட்டுக் கூவும் சேவலின் குரல் /

தட்டித் தட்டி எழுப்பும் அமாமாவின் தொல்லை/
திட்டிய வாறு அழைக்கும் தந்தையின்
கோபம் /
பொறுமை இழந்து எழுந்து
வந்தவுடன் /
முறித்து எடுத்து பல் துளக்கும்
வேப்பங் குச்சி/
அன்றாடம் நடக்கும் காலைக் காட்சி/
கிராமத்து வாழ்வை மறக்க முடியுமா? மச்சே /

பாசத்தில் கொஞ்சம் /
அக்கறை உள்ளது போல் /
அப்பாவிடம் நடிப்பது கொஞ்சம் /
மாட்டுக் கொட்டகைக்குள்/
சென்று மாடுகளை தடாவி விட்டு /ஆட்டுக் குட்டியுடன் விளையாடி /
அப்பா வெளியேறி தலை மறையும்
வரை காத்திருந்து/
மட்டைப் பந்து விளையாட ஓடியதை/
மறக்க முடியுமாடா ? மாப்பிள்ளை/

தந்திரங்கள் பல செய்து /
பக்கத்துக் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு ;
திருவிழா பார்க்கப் போய் /
தாவணிக் கண்ணுங்களுக்கு /
டாவடித்து செம்மையா வாங்கிய/
செய்தியை சொல்லிச் சொல்லி சிரித்தாளேடா நம்ம கருவாச்சி /
அவள் நினைப்பு இப்போது எங்கோ போச்சு./

சொந்தங்கள் ஒன்று கூடும் வேளை /
நம் கையில் கிடைத்த சில்லறையை
வைத்து/
கோலிக் குண்டு ஆடி சண்டை இட்ட/ கதையை எப்படிடா மறக்க முடியும்? மச்சான்/

தாத்தா கூறும் கதை கேட்பது போல் /
பாசாங்கு செய்து அவர் கையில் /
உள்ள மிட்டாயை எதிர் பார்த்து /
இருந்த மழலைப் பருவக் காலத்து நினைவு /
மலை போல் அசையாமல் /
மனதில் உள்ளதடா நண்பா./

பணம் தேடி பட்டணம் வந்த பின்னே /தவற விட்ட சொந்தங்களை /
பல நாள் எண்ணி கண் தினமும் /
நீர் வடிக்கின்றதடா தோழா/

பல ஆண்டு சென்ற பின் /
இன்று சென்று பார்க்கையிலே /
பச்சை சோலையாக இருந்த/
வேளாண்மை மறைந்து போன நிலம் / கண்டு நான் கலங்கி நின்றேனடா/



புகைப்படம் (ஆதவன்)

மீள் நினைவு (இது எந்த ஊர் )

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Nov-18, 7:22 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 92

மேலே