ஆசை ராசாவே

ஆசை ராசாவே
அக் கரையில நீ இருக்க
இக் கரையில நான் இருக்க
அக்கறையுடன் நீயும்
அருகில் வருவது எப்போது?
உன்னை நினைத்து நானும்
ஒத்தை ரோசாவ சூட
மல்லிகைப்பூ வாங்கி வந்து
பரிசம் போடுவது எப்போது?
நெத்தியில பொட்டு
நிதமும் நான் வைக்க
உச்சி வகிட்டில் குங்குமத்தை
எப்போதுநீயும் வைப்ப?
ஆத்தில தண்ணி புரண்டோட
அதில உன்முகம்
பிறை நிலவாய்
ஆடிமாதம் வரும் முன்னே
காஞ்சிப் பட்டு வாங்கிடு
கானாங்குருவி எல்லாம்
காதலுடன் கூடுகட்ட
கனிவான என் மாமனே
கல்யாணம் எப்போது???

எழுதியவர் : உமாபாரதி (16-Nov-18, 8:46 am)
Tanglish : aasai raasave
பார்வை : 211

மேலே