அனிச்சம்

அனிச்சம்
===================================ருத்ரா

"மோப்பக்குழையும் அனிச்சம்
நீ என்று தான்
உன் முகத்தின் அருகே கூட‌
நான் வரவில்லை.
ஆனால் வெகு தூரத்திலிருந்து
என் இதயம் கொண்டு
உன்னை வருடும்போதும்
உனக்கு ஏன் இந்த காயம்?"

"உனக்கு கேட்கவில்லையா
நம் பிரிவில்
இந்த இதயங்கள்
பாறாங்கல்லாய்
கனத்த அலைவரிசையில்
துடிப்பது?"

==============================================









=

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (17-Nov-18, 3:27 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 180

மேலே