காதல்

'அவன்' 'அவள்' என்றிருந்த
இருவரை இணைத்த காதல்
இணைத்தபின் .நான்., ;நீ;
என்ற உணர்வை நீக்கி,... இணைத்து
'நாமாக்கும்.... ஆம் ஈருடல் ஓருயிர்
என்று மிளிரும் காதல், தென்றலின்
வருடலில், அணைப்பில் இன்பத்தின்
எல்லையில் இருந்தாலும், சூறாவளியாய்
வந்து சாடும் எதிரியின் பிடியிலும் அசைவு தராது
ஆடாது, அசையாது , அழிவே நேரிடினும் கலங்காது
தன்னை மாற்றிகொளாது '''''''' காதலர் அழியலாம்
சோதனை என்னும் சூறாவளியில் மாட்டிக்கொண்டு
காதல், அவர்கள் காதல் , அதற்க்கேது அழிவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Nov-18, 3:28 pm)
Tanglish : kaadhal
பார்வை : 392

மேலே