அழகி

ஆயிரமாயிரம் அழகிப் போட்டிகளை
அடிக்கல் நாட்டி நடத்தியிருக்கிறேன்

ஆனாலும் கண்டதில்லை அங்கெல்லாம்
அவளைப் போன்றொரு பேரழகியை

அலங்காரம் ஒப்பனை ஏதுமின்றி
அன்றாடம் சுற்றி திரிந்தாலும்

அவௗில்லாமல் ஒருவரும் அவனியில்
அற்புதமாய் வலம் வரலாகாது

அல்லித் தண்டு பாதம் நோகாமல்
அனுதினமும் கையில் ஏந்தி சென்றிடுவாள்

அதட்டலிலும் புதைத்து வைத்திருப்பாள்
ஆயிரம் மடங்கு அன்பும் பரிவும்

அகர வரிசை தெரியாமல் அவள் எழுதும் கடிதங்கள்
அத்துனை அழகாய் அன்பை சுமந்து வரும்

அயராது ஆண்டவனிடம் கோரிக்கை வைத்திடுவாள்
அவளை பரிவுடன் முதியோர் இல்லத்தில் அமர்த்திய அரக்கனுக்காகவும்..

அண்டமெல்லாம் தேடிடினும் கண்டிட முடியவில்லை
அவளைப் போன்றொரு அழகியை..
"அன்னை" என்ற பேரழகியை..

எழுதியவர் : Sathiyapriya Suryanarayanan (28-Nov-18, 3:54 pm)
சேர்த்தது : Sathiyapriya
Tanglish : azhagi
பார்வை : 1158
மேலே