கற்பனை தூரிகையால்

கற்பனை தூரிகையால் கன்னியுனை
கவிதையாய் வரைந்தேன்

கருங்கூந்தலோ லாவகமாக மாறி
குதிரை வால் கொண்டையானது

வில்லொத்த புருவத்தின் கீழ்
கரு விழிகள் கெண்டையானது

துப்பாக்கி மூக்கோடு தேனூறும்
இதழ்கள் அல்வா துண்டானது

வழுக்கும் சங்கு கழுத்தோடு
அங்கம் மணக்கும் செண்டானது

மொத்தத்தில் அவளை என் மனம்
பல்லவ சிற்பமென கொண்டடுது

எழுதியவர் : ஜெய் ரெட்டி (3-Dec-18, 11:43 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 91

மேலே