குளிக்கும்போது எழுதியது

உன்னைப்பார்த்து
பேசவேண்டும் போல் இருந்தது.
வந்தேன்.
பேசினோம்.
கிளம்பினேன்.
போகும் வழியில்
புரிந்துகொண்டேன்
தவறுகள் இப்படித்தான்
துவங்கும் என்பதை.

*****

ரொம்பநாளாய் அரிக்கிறது
ஏதாவது ரொம்பப்புதிதாய்
படிக்கவேண்டும் என்று...
எதை என்று தெரியவில்லை.

*****

கடலெல்லாம் பருகிவிட்டேன்
சொல்லிக்கொண்டிருந்தது
தொட்டிக்குள் மீன்குஞ்சு.

****

இதைச் செய்வோம்
அதைச் செய்வோமென்று
நம்பி நம்பி வாங்கிய
கல்விப்பட்டங்களை
அரித்து தின்றது
இட ஒதுக்கீடு...
****

எழுதியவர் : ஸ்பரிசன் (3-Dec-18, 9:21 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 61

மேலே