என் சகியே
என் சகியே...
உன் கனவு கரு
உரு பெற வா!
மென் நிழலாய்
உன் வழியினிலே
நான் வரவா?
கை சேர்ந்த பறவை
பிறை தாண்டி பறக்கிறதே !
கரை தேடும் கனவைக்
கண்களிலே சமக்கிறதே!
படிபடியாய் நீ உயர
அடிபடியாய் நான் அமைவேனே !
நடுவானில் முழுமதியாய்
நீ ஒளிர நான் மகிழ்ந்திடுவேனே!
நொடிமுள்ளாய் எந்நேரம்
உன்பின்னே நான் வருவேனே!
நீ காணும் கனவெல்லாம்
திரைச்சீலை உரு தருவேனே !
வாழ்வினில் வந்த துணையே
மெழுகென தருவேன் எனையே...
நீ
களைப்புறும் நேரம்
கைவிரல் கோர்த்து
என் தோள் சாய்ந்தால்
போதும்....போதும்...
என் சகியே...
உன் கனவு கரு
உரு பெற வா!
மென் நிழலாய்
உன் வழியினிலே
நான் வரவா?