பார தீ

பாரதி
இவன் கவிதையின் அகராதி இறந்தும்
இவன் அகத்தில் இன்னும் அகலாதீ

பறை தீப்பற்றி
பாறை தீப்பற்றி
பார தீ பிறந்தான்

இவனுக்கு சிவகாமி
ஊட்டிய குழம்பு தீப்பிழம்பு

இவன் தாய்ப்பால்
குடித்து வளரவில்லை தமிழ்பால்
குடித்து வளர்ந்தவன்

இவன் அன்னையின்
கருப்பை சுமந்ததோ நெருப்பை

இவன் கறுப்பாடை
போன்று நெருப்பாடை அணிந்தவன்

பாரதியின் பா அனைத்தும் தீ

காட்டுத்தீ காட்டு விலங்கினை
அழித்தது
இவன் பட்டுத்தீ நாட்டு விலங்கினை
அழித்தது

இவன் பாரதி உருவில்
பிறந்த பார்வதி

ஜாதி இல்லை பாப்பா
என்றது இவன் பா
அப்பப்பா இவன் பா அனைத்தும்
சந்தனம்பா
அதை அள்ளி நெஞ்சில் அப்பப்பா

இவன் புதுவைக்கு
வந்த புது வெய்யில்

இவன் வறுமையில் இருந்தாலும்
இவனின் மைதான்
அறியாமை பெண்ணடிமை கல்லாமை
ஆங்கிலேயனின் மண்ணடிமை
அனைத்தையும் போக்க
அருமையாய் எழுதியது

புதுவை குமார்

எழுதியவர் : குமார் (11-Dec-18, 10:38 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : baarathi
பார்வை : 154

மேலே