வலியோடு நான் பெண்

முதல் கட்டம்
பெண்ணாக
பிறந்தது
பெற்றவருக்கு
வலி
நான் வளர
அது தொடர
உதிரம் சொட்டும்
வலியோடு
பருவம் மலர
முதல் வலி
உணர
மாதம் மூன்று
நாட்கள்
அது தொடர
இரண்டாம்
கட்டம்
இனவிருத்தி
இணைப்பு
உற்சாக
கொண்டாட்டம்
புரிதல் இன்றி
புணர
இரண்டாவது
வலி
மூன்று நாள்
கட்டாயம்
போல் இதுவும்
மூன்றாம்
கட்டம்,
விதைத்தது
முளைக்கும்
அல்லவா?
முளைத்தது
மூன்று நாள்
கட்டாயம்
காலம் தவற
சிறு குழப்பம்
சற்று ஆறுதல்
நீடிக்கவும்
இல்லை
வாலுபோயி
கத்திவந்த
கதையாய்
விதைத்தது
கிளர
குடலை பிடுங்க
முயற்சி
கக்கும் வலி
நின்றால் வலி
நடந்தால் வலி
உட்கார வலி
படுக்க வலி
உடம்பெல்லாம்
வலி
படைப்பின்
பலன்
பூர்த்தியாக
பெரிய வலி
மறுஜென்மம்
நான்காம்
கட்டம்
மூன்று நாள்
கட்டாயம்
மீண்டும்
ஆரம்பம்
வலிகள்
வருடகணக்கில்
உதிரப்
போக்கோடு
தொடர
தொடக்கம்
என்றால்
முடிவு
உண்டல்லவா?
அதீத
போக்கோடு
அதுவும்
நின்றது
ஐந்தாம்
கட்டம்
நின்ற பிறகும்
வலி
மருத்துவ
காரணங்கள்
தலைசுமை
அல்ல
மாற்றி விட
நான் மட்டுமே
அநுபவிக்கும்
பெண்ணாய்
பிறந்தபலன்