நான் இயற்றும் கவி அழகு

மார்கழி மலர் அழகு...
மழைக்கால மயில் அழகு...
வெயில்கால நிழல் அழகு...
கடந்த கால நினைவழகு...
மழலை அதன் மொழி அழகு...
மான் அதன் விழி அழகு..
நடு இரவவில் மதி அழகு..
நான் இயற்றும் கவி அழகு...
தனிச்சுவை தந்திடும் மாதுளை அழகு...
இவைகளை வென்றிடும் என் மாதுவின் அழகு..
இது கூட ஓரளவு..
இக் கவிதையை எனக்களித்த
என் தமிழ் மட்டுமே பேரழகு...
இதனை உணரட்டும் இப்பூவுலகு.

எழுதியவர் : மா.முரளி (26-Dec-18, 4:28 am)
சேர்த்தது : இதயம் முரளி மா
பார்வை : 1657

மேலே