மதுரை வாழும் சொக்கனவன்
இனியவன் ஆதி முதல்வன்,
அவனே ஆதி சைவன்,
அவனை ஆழ்ந்து தொழுதால்,
அத்தனையும் தந்திடுவான்.
சிந்தையில் நிறைந்திடுவான்,
நிந்தைகள் அகற்றிடுவான்,
விந்தைகள் புரிந்திடுவான்.
வித்துக்கு வினையாயிருப்பான்,
சொல்லுக்கு முதலாயிருப்பான்,
கருத்துக்கு முடிவாயிருப்பான்.
தித்திக்கும் மொழி தருவான்,
எத்திக்கும் நிறைந்திருப்பான்,
முக்திக்கு முதலானவன்,
சக்திக்கு உயிரானவன்.
படித்தவர்க்கும், பாமரர்க்கும்,
பக்கத்திலிருப்பான்,
பரமனவன், படித்தறியா வேதம் அவன்.
நினைவில் நிறுத்தி வணங்கிட,
நித்தம் உடன் இருப்பான்.
அவன் தான் மதுரை வாழும் சொக்கனவன்.