புயலோ பெரும் புயலோ
புதிதான காற்றின் மிதமான
சூழல் நிலவுகின்ற வேகம்
இதயத்தை தொடுகின்றதே
அந்தக் காற்றின் பெயர்தான்
காதலெனும் புயல்
புயலோ அது பெரும்புயலோ
அரணான கோட்டையாம்
இதயத்தை அசைக்கப் பார்க்கிறதே
அசைத்து விட்டது முடியவில்லை
ஆடித்தான் போய்விட்டான்அவன்
இப்புயல் வீச அவன் கண்ணில் பட்ட
அந்த சிறுக்கியே காரணம்
அவன் எண்ணமெல்லாம்
நிரம்பித்தான் நிறைந்தாள் அவள்
காதல் எனும் காற்று அவனுள்
புயலாக வீசத் தொடங்கிற்று
காதல் எனும் புயல் அவனை
அவள் வரவைப் பார்த்து ஏங்க வைத்தது
இனியும் புயல் ஓயாது
தூங்காத கண்களும் உறங்காத உள்ளமும்
அவனுக்கு இனிய உறவாக
அவனுடன் ஒன்றித்து விட்டது