தத்துவ முத்துக்கள்

அன்பு துளைக்காத இதயம்
ஈரமற்றது

கல்வி கொடுக்காத செல்வம்
நிலையற்றது

விட்டுக் கொடுக்காத மனம்
வேண்டாதது

கேள்வியுறாத செவிகள்
ஞானமற்றது

காதல் இல்லாத வாழ்கை
கனிவற்றது

வறுமை காணாத உள்ளம்
செருக்குற்றது

பொறுப்பற்ற ஆட்சி நாட்டில்
துடுப்பற்றது

நகைப்பற்ற மனிதன் உடல்
நோயுற்றது

கறுப்பற்ற மேகங்கள் அவை
மழையற்றவை

வளைவற்ற நீரோட்டம் அவை
நதியற்றவை

எழுதியவர் : பாத்திமாமலர் (8-Jan-19, 11:38 am)
Tanglish : thathuva muthukkal
பார்வை : 357

மேலே