யாருடைய வார்த்தைகள் நாம்
நெடும் நாட்களாக
அந்த
வார்த்தைகள்
மறந்து போய்விட்டது
நான் கூறிய
வார்த்தைகளை
பிரிவென்பது
பெரும் வலி.
காலத்தின்
முடிவில்லா வெளியில்
மிதக்கும் மேகங்களாய்
நகர்ந்த - அந்த
வார்த்தைகளை காணவில்லை.
நாமிருந்த நாட்களில்
ஒரே கண்ணாடியில்
இரு பிம்பங்களாய்
அசைந்து கொண்டிருந்தோம்
கனவுகளின் வார்த்தைகளில்.
நொறுங்கி போன
கண்ணாடித் துகள்களை
கொடுத்துவிட்டு
நீ போகையில்
நமது வார்த்தைகளையும்
கொண்டு போய்விட்டாய்....
நீண்ட நினைவுகளின்
வரிசையில்
வார்த்தைகளுக்காக
காத்திருக்கிறேன்.... !