ஆணவகொலைகள்
அம்மா என்ற வார்த்தையை ஒவ்வொரு அன்னையும் தொடர்ந்து நாவில் உச்சரித்து இருந்து இருந்தால் இன்று ஆணவகொலைகள் நடந்திருக்காதோ என்னவோ ?
ஏய் தாய் என்ற காளியே உன் கணவன் கூட சுகத்திற்கு என்னை பெத்து எடுத்தான் என்று கூரிகொள்ளலாம் – ஆனால் உன்னால் எப்படி முடிந்தது என்னைகொள்ள ?
நான் உன்ன வயிற்றில் உருவானபோது எத்தனை முறை என்னிடம் தனியாக பேசிக்கொண்டாய்.
ஒவ்வொரு முறையும் நான் உன் வயிற்றை உதைக்கும்போது நீ எவ்வளவு மகிழ்ச்சிகொண்டாயே என் அம்மா, அப்போது எல்லாம் நானும் கண்கலங்கினேன், உன் கருவறைக்குள், என் தாயிக்கு என் மீது எவ்வளவு அன்பு என்று...... ஆனால் அந்த கண்ணீர்கள் இன்று கானல்நீராக மாறியதே யம்மா ?
என்னை ஈன்று எடுக்கும்போது உன் புன்சிரிப்புடன் என்னை வருடினாயே என் அம்மா – இன்று அந்தா கைகள் இன்று என்குபோனது என் அம்மா ?
நான் ஒவ்வொரு முறையும் கடைவீதிகளில் காட்டுவதை எல்லாம் வாங்கி தந்தாயே – ஆனால் இன்று மட்டும் ஏன் மவுனம் காத்தாய்......
உங்களின் சுகத்தில் பிறந்ததைவிட நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லையே என் அம்மா – எனக்கு ஏன் பரிசாக சாவு மேடையை தந்தாய்.....
மனிதனை மனிதனாக பார்க்காமல் ஜாதியாக பார்த்து, தாய் என்ற பந்தத்தை கலங்கடித்தாயடி அம்மா.
நீ என் மீது உண்மையில் பாசம் என்ற ஒன்றை காட்டி இருந்திருந்தால் காதல் என்ற மாய வலையில் சிக்கிரிக்கமாட்டேனோ என்னவோ தெரியவில்லையே என் அம்மா...
நீ அன்று பாசத்தை காட்ட தவறவிட்டதால், என் காளுகள் இன்று பாசத்தை நோக்கி பயனித்துவிட்டதே என் அம்மா.....
மு.சண்முகநாதன்
ஒரு பெண்ணின் கண்ணீர் துளிகள் எவ்வாறு இருக்கும் என்று எனது பேனாவின் நுனியில் செதிக்கி உள்ளேன் என்றும் அன்புடன் உங்கள் காவிய தமிழன்....