காதல் வானிலே
💜☘💜☘💜☘💜☘💜☘💜
*காதல் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
💜☘💜☘💜☘💜☘💜☘💜
பெண்ணே!
சில நாட்களுக்குப் பிறகு
உன்னைப் பார்த்ததால்
நான் மண்ணில்
புதியதாக பிறந்தேன்....
உன்னைப் பார்த்ததும்
என் கண்கள்
உறங்கி விழித்தது போல்
புத்துணர்வு பெற்றது...
நீ வரும்போது மட்டும்
கடைவீதி கூட
எனக்கு
வான் வீதியாகத்தான்
காட்சியளிக்கிறது....
நீ சாலை ஓரத்தில்
மணப்பெண் போல் நடந்து வர
என் ஐம்புலன்களும்
செயலற்றுப் போகின்றது....
எனக்குத் தெரியாமலேயே
என் இதயம்
உன்னை நேசிக்கின்றது
நான் என்ன செய்வேன்?
என்னை தொலைத்து விட்டு
உன்னை தேடுகிறேன்
என் நிலைமையைப் பார்த்தாயா?
இன்றாவது வருவாயா வர மாட்டாயா
என்ற சந்தேகத்தோடு காத்திருந்தேன்....
மழையாக நீ வந்தாய்
மண்ணாக நான் குளிர்ந்தேன்...
உன் முகத்தை பார்த்த பிறகு
என் முகம்
ஞாபகத்திற்கு வருகிறது...
மின்னலாக
நீ வந்து போனாலும்
கண்களை மட்டுமல்ல
என் இதயத்தையும்
சேர்த்தே பறித்து விட்டாய்..
நாளை வராமல் போனாலும்
நான் வராமல் போக மாட்டேன்
போய் வா...
கவிதை ரசிகன்
💜☘💜☘💜☘💜☘💜☘💜