பகவத்கீதா வெண்பா கர்ம யோகம் 8 சுலோகம் 22 23 24
22 .
கடமைஒன் றும்மூன் றுலகிலும்இல் லைஎனக்கு
நானடைய வேண்டும்என் றேதும்இல் லைஎனினும்
நான்கடமை ஆற்றுகின் றேன் !
23 .
என்றும்நான் சோர்வின்றி கர்மாசெய் யாவிடின்
என்றுமிம் மாந்தரும் அவ்வாறே என்வழியைப்
பின்பற்றி யேநிற்பார் கள் !
24 .
கடமை யினைஆற்றா மால்வாளாய் நானிருந்தால்
இவ்வுலகம் மாய்ந்துபோம் கர்ம கலப்பினால்
கேடடையச் செய்தேனா வேன் !
---கீதன் கவின் சாரலன்