மனமோ உன் அன்பில் வாழ

பரிகாசம் செய்து என்னை பலவாறாய் இம்சித்தாய்
பல நாளாய் பின் தொடர்ந்து பல்வேறு பெயரிட்டாய்
பார்க்க நீ ஒன்றும் பலசாலி போலில்லை - உன்
படுபயங்கர பேச்சியோ பாயும் புலி போலிருக்கும்
அணித்தலைவன் போலே நீ என்றும்
அனைவரோடும் சேர்ந்துவந்து அமர்க்களம் செய்வாயே
நான், அழகான தோழியருடன் அவ்விடம் கடக்கயிலே
அரட்டி விரட்டி எம்மை அதிகமாய் கிண்டலிப்பாய்
அதைப் போன்ற நிகழ்வாலே வந்தது ஆசை உம்மேலே
அதைத் தெரிவிக்கும் முன்னாலே - என்
அன்புத் தோழி மேல் நீ ஆசைக் கொண்டு
அதிதீவிரமாக அவளையே காதலித்தாய்
ஆற்றொன்னா துயரத்தினால் அல்லல் பல பெற்றேனே
அதை மறக்க நானோ அடுத்த மாநிலம் சென்றேனே
அருமையாக படித்து நானும் அரசு வேலையில் அமர்ந்தேனே
ஆனாலும் எம் மனமோ உன் அன்பில் வாழ எண்ணுதைய்யா
அதெல்லாம் தப்பு என்று உள் அறிவு சொன்னாலும்
உண்மை உள்ளத்தினை உனக்கு நான் சொல்லி விட்டேன்.
––– நன்னாடன்