உழைப்பாளி
உழைப்பாளி
உழைப்பாளி உதவா விட்டால்,
ஒருகோடி பொன்னி ருந்தும்,
பிழைப்பாரோ செல்வந் தர்கள்?
பெருந்தன்மை பெரிதும் வேண்டும்!
உழைப்பாளி உழைத்துச் சிந்தும்
ஒவ்வொரு துளிவி யர்வை,
மழைப்போல மாந்த ருக்கு!
மாற்றங்கள் அவரால் தானே!
மா.அரங்கநாதன்