பாலுறுப்பை மட்டும்

வாழ்க்கை என்பது யாது?
வசதி பெறுவதா ? வாலிபத்தோடு இருப்பதா ?
இயன்ற மட்டும் ஏமாற்றுவதா?
இருப்போரிடம் பிடுங்குவதா ?
விதியே என்று வினை செய்யாமல் விம்முவதா?
பணத்திற்காக பணியாற்றுவதா?
பாலுறுப்பை மட்டும் பெரிதுவப்புவதா?
பாரினுக்கே சிறப்பு சேர்ப்பதா?
உலகத்தோறுக்கு உணவளிப்பதா?
உடலுக்கு மட்டும் உரமேற்றுவதா?
உறவுகளோடு உழன்று மாய்வதா?
உன்னத நிலை ஒன்று உள்ளது என பேசி திரிவதா?
ஒன்றுக்கொன்று முரண்பட்ட மதம் பேணுவதா?
ஓய்வில்லாமல் உழைப்பு செய்வதா?
ஓராயிரம் கோடி பேரை ஒருவன் ஆளுவதா?
ஒருவருக்கும் புரியாத சட்டத்தால் மிரட்டுவதா?
பலருக்கு பயன்படுவதை பதுக்கி வைப்பதா?
நோயை புகுத்துதல் பற்றிய நோக்கம் கொள்வதா?
நொடிதோறும் பெரும் கெடுதல் நினைப்பதா?
பேராற்றலின் பேரில் பெரிய மாளிகை கட்டுவதா?
இயற்கை காக்க இயக்கம் நடத்துவதா?
எட்டியுள்ள கிரகத்துக்கு ஏவுகணை விடுவதா?
பட்டங்கள் தருவதாக பம்மாத்து கூறுவதா?
––– நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (2-Feb-19, 7:07 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 90

மேலே