காதல்

மாடத்திலே ஜோடி புறா
கொஞ்சி குலாவி இங்கும் அங்கும்
பறந்து காதல் புரிந்திட கண்டேனடி
பெண்ணே நீயோ கன்னிமாடத்தின் உள்ளே
என் நினைவு கூட வாராது என்னதான் செய்கின்றாயோ
நான் அறியேனே, வா வா எந்தன் காதலியே
கன்னி மாடம் திறந்து வா
காதலன் காத்திருக்கிறேன் உனக்காக
வந்து என்னை அணைத்திட வா
இருவரும் சேர்ந்திடுவோம் -அந்த
ஜோடி புறாக்கள்போல , ஆடிப் பாடிடுவோம்
மகிந்திடுவோம் காதல் சிறகடித்து
கற்பனையில் விண்ணை வலம் வருவோம்
வா வா எந்தன் காதலியே கன்னிமாட பைங்கிளியே வா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Feb-19, 11:33 am)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே