ஆயூளும் கூடுதடி மனம் ஆனந்தமாகுதடி

செந்தாமரையில் இழை எடுத்து
சிறு முல்லையை கோர்த்து வைத்து
செழிப்பாய் பூத்தது போல்
சிரிக்கின்ற சிவப்பு நிற சிற்பமே

அற்புதமாய் அளவெடுத்து
பொற்குழம்பில் அழகை சேர்த்து
பெண் உருவாய் வார்த்தெடுத்த
பேரெழில் ஓவியமே

பனியில் தமிழைக் குழைத்து
கனியினை ஒத்த செவ்வாயால்
அன்பாய் நீ அழைக்கையிலே - என்
ஆயூளும் கூடுதடி மனம் ஆனந்தமாகுதடி

சிறு சொட்டு நீர் துளி ஒன்று
சிக்கென்று வெள்ளித் தட்டில் விழுந்து
சிதறி விடுவதைப் போல் - இரும்பு
இதயம் எண்ணிலடங்கா துண்டாய் ஆனதடி.
__ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (8-Feb-19, 10:53 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 169

மேலே