காத்திருக்கேன்
அண்ணா.........
மூவேழு ஆண்டுகளில்
முற்றிலும் மாறியதடா....
முற்றத்தில் நீ வைத்த
வேப்பங்கன்று -பேரு
விருட்சமாகி விட்டதடா
அக்கம் பக்கமெல்லாம்
அவரவர் வாழ்க்கையில்
எத்தனையோ மாற்றங்கள்
ஆனால்
அம்மாவும் அப்பாவும்
கோவிலே கதிஎன்றாகினர்
உன் விடுதலை வேண்டியே,.....
நான் மட்டும் இன்று
உன் வருகைக்காய்
காத்திருக்கேன்
வாசல் படலை பார்த்தே..............