கருப்பு நாள்
கருப்பு நாள்
அன்பின் நதிகளில் இரத்தம்
அழுக்கை அகற்றி தின்ன மீன்கள்
செத்து மடிந்தன
உங்கள் தொழில்நுட்பங்கள்
உயிர் கொல்லிகளாய் இன்று
கடும் பனியையும் கொடும் குளிரையும்
உங்கள் தேகத்தின் தேசப்பற்று
சுட்டு எரித்து கொண்டிருந்தபோது
போர் நயம் புரியா பெட்டை
நாய்களின் புறமுதுகு தாக்குதலில்
சிரம் தாழா உங்கள்
உரம் பாய்ந்த உயிர்கள்
வெந்து சிதறியபோது
தெறித்த இரத்தம் தேசமெங்கும்
கண்ணீர்துளிகளாய்
உயிரை திறனமாக மதித்த
வீர மனிதர்களே
கண்ணைக்காட்டிலும் மண்ணைகாக்கும்
மனம் கொண்ட மனித இறைகளே
கறை படிந்த இந்நாள்-ஒரு
காவியம் ஆகட்டும்
களம் சென்று உயிர் துறந்த
கண்மணிகள் சிதறுண்ட
இரத்த துளிகள் இந்திய தேசத்தின்
காற்றுகளில் கலக்கட்டும்
ஒவ்வருவரின் சுசாசத்திலும்
நினைவூட்டி பரவட்டும்