கனவுகள் கலைந்தது
கனவுகள் எளிதானது
கன்னிகளுக்குள் மிக ஆழமானது
கல்யாணத்துக்கு பின் முரணானது
காலத்தின் ஓட்டத்தில் முற்றுப்புள்ளியானது
பெண்களின் கனவுகள் .....
சாதிக்க தூண்டும் கனவுகள்
சாதாரணபிறப்பின் நினைவுகள்
சங்கடமாய் நினைக்கும் உறவுகள்
சங்கீதமின்றி புதைந்திடும்
பெண்களின் கனவுகள் ....
பெண்களின் சொத்துரிமை பெரியாரின் கனவு
புதுமை பெண்ணின் பாரதியின் கனவு
சாதிக்க தோன்றும் பெண்ணின் நினைவு
மனதில் மட்டுமே இருந்திடும் துணிவு
கடைசியில் கணவன் சொல்லிற்கே பணிவு
இங்கு புதைந்திடும் பெண்களின் கனவு .