அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை அரவணைக்கும் ராமநாதபுரம் கிராமம் வீடுகளில் மண்பானைக் கூடுகள்

ராமநாதபுரம் மாவட்டத்தின் நாகநாதபுரம் கிராமத்தில், தங்களது வீடுகளில் உடைந்த மண்பானைகளைக் கூடுகளாக்கி, வைக்கோல் படுக்கை விரித்து, தானியம், தண்ணீர் வைத்து சிட்டு குருவிகளை வீடுகளுக்கு வரவழைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர் அந்த ஊர் மக்கள். உயர்ந்து நிற்கும் செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டு குருவி இனம் அழிந்து வருவதாக அனைவருமே கவலையில் இருப்பதால்தான் சிட்டு குருவிகளை பாதுகாப்போம் என்று நம்மிடையே முழக்கம் அதிகரித்து வருகிறது. நகரத்தில் சிட்டு குருவிகள் ஒன்று கூட கண்களில் படுவதில்லை. கிராமங்களில் அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள நிலையில் சிட்டு குருவி இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தின் நாகநாதபுரம் மக்கள். இவர்கள் வீடுகளின் வாயில்களில் தொங்கும் உடைந்த மண்பானை கூடுகளில் சிட்டு குருவிகள் சர்வ சாதாரணமாக வந்து போகின்றன. வீட்ல கூடு இருக்கா? சிட்டு குருவிகள் கூடுகளில் இருக்கும் தானிய உணவுகளை கொத்தி கொத்தி ருசிப்பதும், அலகை அசைத்து அசைத்து தண்ணீரை ருசிப்பதும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகவும், மனதை வருடுவதாகவும் இருக்கிறது. கூடுகள் அமைத்த புதிதில் ஒன்றிரண்டு குருவிகள்தான் ஆரம்பத்தில் வந்து போனதாம். அதிகரிக்கும் வருகை ஆனால், இப்போது வீட்டுக்கு வீடு கூடுகள் இருப்பதைக் கண்டு உணவு தண்ணீர் கிடைக்கும் என்று நிறைய சிட்டு குருவிகள் வந்து போவது சகஜமாக இருப்பதாக கூடுகளை அமைத்துள்ள மக்கள் ஆச்சரியத் தகவல்களைத் தெரிவிக்கின்றனர். குருவி வருது ஆனால் வனத்துறை அதிகாரிகள் வேறு மாதிரி சொல்கிறார்கள். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், ராமநாதபுரத்தில் இந்த வருடம் ஓரளவு தேவைக்கு ஏற்ப மழை பெய்ததால், வானம் பார்த்த பூமியான இங்கு சிறுதானிய விளைச்சல் அதிகமாகி உள்ளது. இந்த தானியங்களே சிட்டு குருவிகளின் உணவுகள். இதனால்தான் ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாய கிராமங்களில் சிட்டு குருவிகள் அதிகரித்து உள்ளன. பெருகும் இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருந்தால் இப்போது பெருகி வரும் சிட்டு குருவி இனங்களை மேலும் பெருக்கலாம். அவைகளுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் என்று வசதி செய்து கொடுத்தால், சிட்டு குருவி இனம் பெருகி, தாங்களே கூடுகள் கட்டும் நிலைக்கு திரும்பிவிடும் என்று கூறினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



எழில்செல்வி

எழுதியவர் : (23-Feb-19, 3:30 pm)
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே