கோமணத்து சிறார்கள்

முகில்கள் முத்தமிட
கிளு கிளுத்து !
சிரித்து விடும் மலைகள்
புன்னகைத்து சிந்த விடும்
நீரூற்று பள்ளங்கள் !
ஆர்ப்பரித்து ஓடி வர
ஆசையாய் தொட்டு உரசும்
கரையோரத்து மரங்கள் !
தொட்டுரசி இன்ப சிலிர்ப்பில் !
சிதற விடும் பழங்கள் !
அத்தனையும் கொத்தி எடுக்க
காத்திருக்கும் பறவைகள் !
பறவைகளின் சிறகடிப்பு
அவ்விடத்தின் எக்காளம் 1
அத்தனையும் தாண்டி
தப்பி வரும் பழங்கள்
அள்ளி எடுக்க !
துள்ளி குதித்து நீந்தும்
எங்கள் ஊர் கோமணத்து
சிறார்கள் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Mar-19, 12:23 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 74

மேலே