விநாயகர் வாழ்த்து !

வழித்துணை விநாயகனே உன்னை
வணங்கிடும் மனதில் அமைதி
விளங்கிடும் மனமாய் முன் நின்று
பின் செல்லும் வழிகாட்டியாய்
வாழ்க்கை துணைவனே நீ .....!

முதல் எழுத்தின் தலை எழுத்தாய்
மும்மூர்தியின் மைந்தனே உன்
முகம் காணும் மக்களுக்கு பல
யுகமாய் இருக்கும் குறைகளை
கலைந்து கருணை வடிவில்
கண்ணீர் துடைக்கும் கற்பக பொருளே .....!

உன் திருநாமம் தினம் தினம்
கேட்கும் மனதில் ஒரு நாமமாய்
உள் சென்று திரு நாமமாய் இத்
தரணியில் தலை காட்டும் நீ .....

தன்னிகரில்லா தலைவனாய் என்
தலைவிதியை மாற்றி ஒரு மதியாய்
என்னுயிரில் கலந்து உறவாடும்
விநாயகனே உன்னை மனதாற
போற்றுகிறேன்......!

என் மக்கள் .....
எல்லா நலமும் வளமும் பெற்று
மெய் மக்களாய் மென்மேலும் உயர
வணங்கி வாழ்த்துகிறேன் .....!



எழுதியவர் : hishalee (2-Sep-11, 9:58 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 308

மேலே