மன்னிக்க இயலா குற்றம்

மன்னிக்க இயலா குற்றம்
மனிதனின் மரபு மீறலை சுட்டவும்
மாபெரும் வரம்பு கடத்தலை களையவும்
மகத்துவ மனிதர்களால் கட்டப்பட்டதே சட்டம்
மக்கிய எண்ணங்களால் உலக மாண்பு மீறுகையில்
மன்னிக்க இயலா குற்றம் செய்கையில்
மற்றைய எண்ணம் கொண்டோர் துணிவை குலைக்க
மாய வித்தை செய்து பெயர் பெற்றோர் என்றாலும்
மன்னித்தலின் பால் மனதை செலுத்தாமல்
மறுசீரமைப்புக்கு கிஞ்சித்தும் இடமின்றி
மாண்புமிக தீர்ப்பை கூறுமிடமே நீதி மன்றம்.
--நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Mar-19, 9:43 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே